Tamilwin Lankasri Manithan
Share with Facebook Friends Share
விசேட செய்திகள்
இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!
21 Apr 2015
இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினைக்கு தீர்வு காண விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, குருவாயூர் கோவிலில் நேற்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் தலைவர் அழைக்கப்பட்டமை ஏற்புடையதல்ல அஜித் பெரேரா
21 Apr 2015
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் தலைவர் பாராளுமன்றிற்கு அழைக்கப்பட்டமை ஏற்புடையதல்ல என பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
மது, இறைச்சி கடைகள் மே 3,4இல் மூடப்படும்
21 Apr 2015
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான கடைகள், இரவு விடுதிகள் மற்றும் இறைச்சிக் கடைகள் எதிர்வரும் மே மாதம் 03, 04ஆம் திகதிகளில் மூடப்படும் என்று மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.
சிறிசேனவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை?
21 Apr 2015
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் முனைப்புக்கள் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
 நாடாளுமன்றம் 27 வரை ஒத்திவைப்பு
21 Apr 2015
நாடாளுமன்றம் எதிர்வரும் 2ஆம் திகதி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தையடுத்தே நாடாளுமன்றம் 27ஆம் திகதி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மஹிந்தவிடம் செல்லும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு
21 Apr 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் சென்று வாக்குமூலமொன்றைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்துக்கு உத்தரவிடுவதாக நீதி அமைச்சர் உறுதியளித்ததாக சபாநாயகர், சற்றுமுன்னர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
மகிந்தவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் ( வீடியோ, படங்கள் இணைப்பு)
21 Apr 2015
முன்னாள் ஜனாதிபதி மகிந்தவிற்கு ஆதரவு தெரிவித்து பத்தரமுல்ல, பாராளுமன்ற சுற்று வட்ட பாதையில் தற்பொழுது ஆயிரக்கணக்கான பொது மக்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பசில் ராஜபக்ஸ வந்தடைந்தார் ( படங்கள் இணைப்பு)
21 Apr 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் சகோதரரும், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஸ கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.
ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்
21 Apr 2015
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராகவும் நம்பிக்கையில்லா தீர்மானமொன்று கொண்டு வரப்பட உள்ளது.
அரபு நாட்டில் இலங்கையரின் துயரம் வெளிச்சத்தில்.( படங்கள் இணைப்பு)
21 Apr 2015
முதல் தர முஸ்லிம்" என்ற முகநூலில் இருந்து பிரதி செய்யப்பட்டது.
ஆக்கம் நிறைய கவலைகளை தோற்றுவித்தது.நிறைய உண்மைகள் இருந்தது. அரபு நாடுகளில் கடமையாற்றும், கடமையாற்றிய நண்பர்கள் உங்கள் அனுபவங்களை பதிவேற்றலாம்.
பீகொக் மாளிகையின் உரிமையாளரைக் காணவில்லை? (படம் இணைப்பு)
20 Apr 2015
பீகொக் மாளிகையின் உரிமையாளரும் பிரபல வர்த்தகருமான ஏ.எஸ்.பி லியனகேவை காணவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஊடகப் பேச்சாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.சில நாட்களாக லியனகேவை காணவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்தவை அழைத்தால் என்ன பிழை? ரணில்
20 Apr 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை அழைத்து விசாரணை நடத்துவதில் என்ன பிழை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாரளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.
கூட்டமைப்பு பதிவில்லை! தமிழரசுக்கட்சி முடிவு!
20 Apr 2015
கூட்டமைப்பினை பதிவு செய்வதில்லையென தமிழரசுக்கட்சியின் யாழ்.கிளை மீண்டும் ஒன்று கூடி முடிவு செய்துள்ளது.இன்று யாழ்.நகரின் மார்டின் வீதி தலைமையத்தினில் நடைபெற்ற கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பாதசாரிகள் கடவையில் வயோதிபர் பலி: சாரதிக்கு கடூழிய சிறை
20 Apr 2015
கல்கிஸை பிரதேசத்தில் பாதசாரிகள் கடவையில் வீதியை கடக்க முயன்ற வயோதிபர் மீது மோதி, அவரது மரணத்துக்கு காரணமாகவிருந்த முச்சக்கரவண்டி சாரதிக்கு ஒரு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது! மஹிந்த
20 Apr 2015
தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தற்போது நாட்டின் தேசிய பாதுகாப்பு பாரியளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற அமர்வுகள் நாளை வரையில் ஒத்தி வைப்பு
20 Apr 2015
பாராளுமன்ற அமர்வுகள் நாளை வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 19ம் திருத்தச் சட்டம் குறித்த உத்தேச பிரேரணை இரண்டாம் வாசிப்பின் பின்னர் இவ்வாறு பாராளுமன்ற அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
தாயையும், சகோதரியையும் கொலை செய்த இளைஞன் ( வீடியோ, படங்கள் இணைப்பு)
20 Apr 2015
கொத்மலை, பூண்டுலோயா பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் தனது தாயையும், சகோதரியையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.
இன்று அதிகாலை இக்கொடூர சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹிந்தவுக்கு ஆதரவாக 55 எம்.பி.க்கள் கடிதம் ( படங்கள் இணைப்பு)
20 Apr 2015
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு அழைக்கவேண்டாம் என்று வழியுறுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடிதமொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி, நாடாளுமன்றுக்கு வருகை (படம் இணைப்பு)
20 Apr 2015
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்று நேரத்துக்கு முன்னர் நாடாளுமன்றத்துக்கு வருகைதந்தார்.
வடக்கிற்கு விருப்பு வாக்கு முறைமையே சிறந்தது சுமந்திரன் கருத்து (படம் இணைப்பு)
20 Apr 2015
தொகுதிவாரி தேர்தல் முறையை விட விகிதாசாரத் தேர்தல் முறை கூடுதல், ஜனநாயகத் தன்மை வாய்ந்தது என்றும், வடக்கைப் பொறுத்தவரையில் விருப்பு வாக்குமுறை சிறந்தது என்றும், கருத்து வெளியிட்டுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.
முதற் பக்கம்

அடுத்த பக்கம்


இலங்கைச் செய்திகள்
மரண அறிவித்தல்கள்
Lankari Notice
வினோதச் செய்திகள்
Lankasri Radio
விளையாட்டுச் செய்திகள்
உலகச் செய்திகள்
சினிமாச் செய்திகள்
இந்தியச் செய்திகள்
தொழிநுட்பச் செய்திகள்
eXTReMe Tracker