Tamilwin Lankasri Manithan
Share with Facebook Friends Share
விசேட செய்திகள்
யாழில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட வயோதிபத்தாய்க்கு கிடைத்த அதிஷ்டம்! (வீடியோ இணைப்பு)

யாழ். காரைநகரில் நீதிமன்ற உத்தரவின்பேரில் முரசறைந்து வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட மூதாட்டியின் வீடு, நேற்று மீண்டும் அவருக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

காரைநகரைச் சேர்ந்த மனிதநேயக் கொடையாளர்களின் நிதி உதவியுடன் அந்தப் பெண்மணி இன்று மீண்டும் தனது சொந்தவீட்டில் குடியேறினார்.

காரைநகர் வெடியரசன் வீதியைச் சேர்ந்த ஏரம்பு ஞானேஸ்வரி என்ற பெண்மணி பணத் தேவையின் பொருட்டு தனது வீட்டை அவ்வூரைச் சேர்ந்த ஒருவரிடம் இரு வருட தவணை அடிப்படையில் அறுதி உறுதி எழுதி ஈடு வைத்தார்.

சுமார் மூன்று இலட்சம் ரூபாவிற்கு வீடு ஈடு வைக்கப்பட்டது.

உரிய காலத்தில் அந்த வீட்டை மீட்க முடியாத காரணத்தால் ஈடு பிடித்தவர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தனர். நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையினல் அந்த வீடு ஈடு பிடித்தவர்களுக்குச் சொந்தமானது.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை மூதாட்டியின் வீட்டுக்குப் பொலிஸார் சகிதம் வந்து, வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தையும் நீதிமன்றப் பணியாளர்கள் வெளியே வீதியில் தூக்கி வைத்துவிட்டு அந்தப் பெண்மணியையும் வீட்டை விட்டு வெளியேற்றியிருந்தனர்.

அவர்கள் வரும்போது பானையில் சோறு அவிந்துகொண்டிருந்தது. அந்தப் பானையை அப்படியே தூக்கி வெளியே வைத்தனர் என மூதாட்டி கண்ணீர் மல்க கருத்து வெளியிட்டிருந்தார்.

மூதாட்டியின் நிலை தொடர்பாக சமூக வலைத்தளங்களும் இணைய, அச்சு ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டதன் அடிப்படையில் அவருக்கு உதவுவதற்கு பல தரப்பினரும் முன்வந்தனர்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக மேஜர் இளமகன் என்ற மாவீரரைத் தந்த தாய் என்ற அடிப்படையில் அவர் மீது அனைவரின் பார்வையும் திரும்பியது.

இந்த நிலையில், அவரது ஊரைச் சேர்ந்த வெளிநாட்டில் உள்ளவர்கள் சிலர் தாங்களாக முன்வந்து பணத்தை திரட்டி அனுப்பியதன் பயனாக ஈடு பிடித்தவர்களுக்கு 5 இலட்சத்து 26 ஆயிரம் ரூபா பணம் செலுத்தி அந்த வீடு மீண்டும் பெறப்பட்டு மூதாட்டியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, காரைநகரிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் செயற்பாட்டாளரும், சமூக ஆர்வலருமான தம்பையா கருணாநிதி எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக சுமார் 2 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா நிதி சேர்க்கப்பட்டது.

மேலும், அவ்வூரைச் சேர்ந்த சிவகாமி நலன்புரி ஒன்றியத்தின் புலம்பெயர்ச் செயற்பாட்டாளர்களின் முயற்சியால் 2 இலட்சத்து 96 ஆயிரம் ரூபா நிதி சேர்க்கப்பட்டது. இதன்மூலம் அந்த வீடு மீட்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை சட்டத்தரணி சாருஜா சிவநேசனின் காரைநகரிலுள்ள அலுவலகத்தில் காணி மீளவும் அந்த மூதாட்டியின் பெயரில் எழுதப்பட்டது.

இதன்போது ஈடு பிடித்தவர்கள், காணி உரிமையாளரான ஞானேஸ்வரி, பாரதி கலை மன்றம் மற்றும் சிவகாமி நலன்புரி ஒன்றியத்தின் பிரதிநிதிகள், குறித்த பிரதேசக் கிராம சேவையாளர், சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் நலன்விரும்பிகள் சிலரும் பிரசன்னமாகியிருந்தனர்.

தனது சொந்த வீடு மீளவும் தனக்குக் கிடைக்கப் பெற்றமை தொடர்பில் குறித்த மூதாட்டி பெரு மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன், மீளவும் தனது வீடு கிடைப்பதற்குக் காரணாமாகவிருந்த மனித நேயச் செயற்பாட்டாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.




08 Sep 2017
இலங்கைச் செய்திகள்
மரண அறிவித்தல்கள்
Lankari Notice
வினோதச் செய்திகள்
Lankasri Radio
விளையாட்டுச் செய்திகள்
உலகச் செய்திகள்
சினிமாச் செய்திகள்
இந்தியச் செய்திகள்
தொழிநுட்பச் செய்திகள்
eXTReMe Tracker