Tamilwin Lankasri Manithan
Share with Facebook Friends Share
விசேட செய்திகள்
இலங்கை வைத்தியர் ஒருவரின் நெகிழ்ச்சியான செயற்பாடு! (படங்கள் இணைப்பு)

வைத்தியர் ஒருவர் மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளன.

ஏரங்க மத்துமல் என்ற வைத்தியர் அதிகாலை தனது காரில் கொழும்பை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனது காரில் பாடல் கேட்ட நிலையில் பயணித்து கொண்டிருக்கும் போது அவருக்கு பூனைக் குட்டி சத்தம் கேட்டுள்ளது. எனினும் பாடல் சத்தத்தினால் அவர் அதனை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. சற்று நேரத்தில் மீண்டும் அந்த சத்தம் கேட்டுள்ளது.

அதனால் அவர் பாடலை நிறுத்தி விட்டு சத்தம் கேட்ட திசைக்கு செவி கொடுத்துள்ளார். அந்த சத்தம் காரில் இருந்து வந்ததை வைத்தியர் உறுதி செய்து கொண்டுள்ளார்.

காரின் முன்பக்கத்தில் உள்ள என்ஜின் உள்பகுதியில் இந்த பூனை சிக்கியிருந்தது. எனினும் அவரால் அதனை கண்டுபிடிக்க முடியவில்லை. பூனையை மீட்பதற்காக பல்வேறு உணவுகளை என்ஜின் மீது வைத்து பூனை வெளியே வரும் என காத்திருந்தார்.

சற்று நேரத்தின் பின்னர் ஒன்றின் பின் ஒன்றாக இரண்டு பூனைக்குட்டிகள் வெளியே வந்துள்ளன. பூனைக்குட்டிகளை மீட்ட வைத்தியர் அதனை பாதுகாப்பான ஒரு இடத்தில் விட்டு சென்றுள்ளார்.

வைத்தியரான அவரின் தனது உழைப்பினை பொருட்படுத்தாமல், நீண்ட நேரம் காத்திருந்து பூனைக்குட்டிகளின் உயிரை காப்பாற்றியமை குறித்து பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


10 Sep 2017
இலங்கைச் செய்திகள்
மரண அறிவித்தல்கள்
Lankari Notice
வினோதச் செய்திகள்
Lankasri Radio
விளையாட்டுச் செய்திகள்
உலகச் செய்திகள்
சினிமாச் செய்திகள்
இந்தியச் செய்திகள்
தொழிநுட்பச் செய்திகள்
eXTReMe Tracker