Tamilwin Lankasri Manithan
Share with Facebook Friends Share
விசேட செய்திகள்
பிரபாகரன் உயிரிழப்பில் ஓர் கவலையான விடயம் உள்ளது! மனம் திறந்தார் கமால்

பிரபாகரனின் உடலை முதன்முறையாக கண்ட போது, உயிரிழந்தது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன்தான் என்று உறுதிப்படுத்துவதற்கு ஏராளமான தடயங்கள் கிடைத்திருந்ததாக முன்னாள் இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரட்னம் தெரிவித்துள்ளார்.

பிரபாகரனின் உடலுக்கு அருகில், அவரது அடையாள அட்டை, நீரிழிவு நோய்க்கு பயன்படுத்தும் மருந்துகள் மற்றும் கைத்துப்பாக்கி ஒன்று கிடைத்ததாக தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

இதில் ஒரு கவலையான விடயம் உள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களிடம் உயிரை மாய்த்துக்கொள்ளும் சயனைட் குப்பிகள் காணப்பட்டன.

ஆனால் விடுதலைப்புலிகளின் தலைவரிடம் உயிரை மாய்த்துக் கொள்ளும் சயனைட் குப்பிகள் காணப்படவில்லை, ஆனால் அவருடன் இருந்த ஏனைய உறுப்பினர்கள் சயனைட் உட்கொண்டு உயிரிழந்திருந்தனர். அவர்களுடைய உடல்களை நாம் கைப்பற்றியிருந்தோம்.

பிரபாகரன் தலையில் துப்பாக்கி ரவை தாக்கி உயிரிழந்து கிடந்தார் என்று கமால் குணரட்னம் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பிரபாகரனின் உடலை கண்டுபிடித்த போது “இலங்கை வரலாற்றல் மிகவும் கொடூரமான மனிதன் இராணுவத்தின் துப்பாக்கிப்பிரயோகத்தில் உயிரிழந்தார்” என்று அங்கிருந்த ஊடகவியலாளர்களிடம் தெரிவித்ததாகவும் கமால் தெரிவித்துள்ளார்.
09 Oct 2017
இலங்கைச் செய்திகள்
மரண அறிவித்தல்கள்
Lankari Notice
வினோதச் செய்திகள்
Lankasri Radio
விளையாட்டுச் செய்திகள்
உலகச் செய்திகள்
சினிமாச் செய்திகள்
இந்தியச் செய்திகள்
தொழிநுட்பச் செய்திகள்
eXTReMe Tracker