Tamilwin Lankasri Manithan
Share with Facebook Friends Share
விசேட செய்திகள்
யாழ். ஊர்காவற்துறையில் கரப்பிணி பெண் படுகொலை! நீதிபதியின் கடும் உத்தரவு

யாழ். ஊர்காவற்துறையில் கர்ப்பிணி பெண் ஹம்சிக்கா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான விசாரணையை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவபம் தொடர்பிலான வழக்கு ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.எம்.ரியால் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் முன்னெடுக்கும் விசாரணைகள் திருப்தியளிக்கவில்லை என இரு தரப்பு சட்டத்தரணிகளும் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.

எனவே, சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறும் இரு தரப்பு சட்டத்தரணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனினும், ஒரு இடத்துடன் மாத்திரம் தொடர்புப்பட்ட சம்பவங்கள் குறித்து பொலிஸ் பிரிவிற்குள் விசாரணை நடத்துமாறும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் விசாரணையை ஒப்படைக்க வேண்டாம் என சட்டமா அதிபர் திணைக்களம் சுற்றுநிரூபம் வெளியிட்டுள்ளது.

சம்பவம் பல்வேறு இடங்களுடன் தொடர்புடையதாக இருந்தால் மாத்திரமே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் விசாரணைகளை ஒப்படைக்க முடியும் என கூறிய நீதிபதி, சட்டத்தரணிகளின் கோரிக்கையினையும் நிராகரித்துள்ளார்.

சம்வம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிபதி பணித்துள்ளார்.

இதேவேளை, யாழ். ஊர்காவற்துறை பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி கர்ப்பிணி பெண் ஹம்சிக்கா படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
10 Oct 2017
இலங்கைச் செய்திகள்
மரண அறிவித்தல்கள்
Lankari Notice
வினோதச் செய்திகள்
Lankasri Radio
விளையாட்டுச் செய்திகள்
உலகச் செய்திகள்
சினிமாச் செய்திகள்
இந்தியச் செய்திகள்
தொழிநுட்பச் செய்திகள்
eXTReMe Tracker