Tamilwin Lankasri Manithan
Share with Facebook Friends Share
விசேட செய்திகள்
வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்த யாழ் இளைஞன் கட்டுநாயக்கவில் கைது

டுபாயில் இருந்து இலங்கை வந்த தமிழர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மலேசியாவின் போலி வெளிநாட்டு கடவுச்சீட்டை பயன்படுத்தி குறித்த நபர் இலங்கை வந்த வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளினால் நேற்று முன்தினம் அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கை ஊடாக ஆட்களை ஐரோப்பாவுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கைது செய்யப்பட்ட இந்த நபரும் அதே முறையில் மலேசியாவுக்கு சென்று போலி வெளிநாட்டு கடவுச்சீட்டு தயாரித்து பிரான்ஸ் நாட்டிற்கு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம், கிளிநொச்சி பிரதேசத்தை சேர்ந்தவராகும். அவர் நேற்று முன்தினம் அதிகாலை டுபாயில் இருந்து இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர்.

இந்த நபர் தொடர்பில் சந்தேக ஏற்பட்டமையினால் கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு குடியகல்வு அதிகாரி நீண்ட நேரம் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ள போதே இந்த மோசடி நடவடிக்கை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
14 Nov 2017
இலங்கைச் செய்திகள்
மரண அறிவித்தல்கள்
Lankari Notice
வினோதச் செய்திகள்
Lankasri Radio
விளையாட்டுச் செய்திகள்
உலகச் செய்திகள்
சினிமாச் செய்திகள்
இந்தியச் செய்திகள்
தொழிநுட்பச் செய்திகள்
eXTReMe Tracker